ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில் முதல் தொடர் நடைபெற்ற நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை இந்தியா நடத்தியது. அது மட்டுமல்லாமல் கலந்த 2012 ஆம் ஆண்டு வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன.
அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதுவரை ஏழு முறை மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தொடர் நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து எட்டாவது முறையாக மகளிர் டி20 உலக கோப்பை போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்க உள்ள நிலையில் இந்தியா இதில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதனால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடியுள்ள 5 டி20 ஆட்டங்களில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு மேலும் எகிரி உள்ளது.