இந்தியாவில் அழகான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் வருவதால் காதலர்கள் அவுட்டிங் செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் சில பிரத்தியேகமான இடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி கோவாவில் உள்ள அகோண்டா பீச்சில் பல அழகான இடங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் போன்றவைகள் இருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டத்திலிருந்து 3870 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தங்கர் மடாலயம் (ஸ்பிட்டி). கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி. அதன் பிறகு கோவாவை விட வித்தியாசமான பீச்சுக்கு செல்ல விரும்புபவர்கள் அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம்.

கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரகோட் நீர்வீழ்ச்சி. ஸ்ரீ நகரில் அமைந்துள்ள தால் ஏரி. மேகலயாவில் உள்ள டாவ்கி. ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மஹால். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர். சிம்லாவில் உள்ள கல்கா-சிம்லா ரயில்வே. அதன் பிறகு சாகச பயணம் செய்ய விரும்புபவர்கள் கீ மடாலயம் (ஸ்பிடடி) செல்லலாம். உதய்பூரில் உள்ள பிச்சோலா ஏரி. மேகலாயாவின் நான் கிரியேட் பகுதியில் உள்ள லிவிங் ரூட்‌ பிரிட்ஜஸ். ஜோத்பூரில் உள்ள மெஹ்ரன்ஹர் கோட்டை போன்ற இடங்களுக்கு செல்லலாம். மேலும் மேற்கண்ட இடங்களில் காதலர்கள் நேரத்தை செலவழிப்பதற்கு ஏற்ற அழகான இடங்கள் அமைந்துள்ளது. எனவே இந்த காதலர் தினத்தில் உங்கள் பார்ட்னருடன் வெளியில் செல்ல விரும்பினால் மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம்.