விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவு தான். ஆனால் கேப்டன் நல்லா இருக்காரு. இப்போ அவருக்கு இருக்கின்ற உடல்நிலைக்கு அவரு  100 வயசு வரை நல்லா இருப்பார். பழையபடி வருவாரா ? பேசுவாரா ? நடப்பாரா ? என்பதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாங்களும் நம்புகின்றோம் உங்கள் எல்லோரு மாதிரியும்.. இப்போதைக்கு கேப்டன் நல்லா இருக்காரு.

அப்பா இருந்த காலகட்டத்தில் தேமுதிக கட்சியை வளர்த்து வளர்த்துக் கொண்டு வர சாதாரண விஷயமாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் வரையும் வந்தார். இப்போ  அம்மாவும் – நீங்களும் அந்த அளவுக்கு கட்சியை வளர்த்துக் கொண்ட கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றதா ?  என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன்,

கேப்டனோட தாரக மந்திரமே முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது என்று சொல்லுவாரு. அதை தான் எங்களோட தாரக மந்திரமாக நாங்கள் எடுத்துள்ளோம்.  முடியாது என்பது ஏதும் இல்லைங்க. ஒரு விஷயம் முடியாது என்றால் முயற்சி பண்ணுறது வேஸ்ட். ஒரு விஷயம் முடியும் என்பதால் முயற்சி செய்கின்றோம்.எங்க அம்மா இன்றைக்கு ஒன்னும் கட்சிக்குள்ளே வரவில்லை.

ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே எங்க அப்பாக்கு நிழலாக இருந்து  சப்போர்ட் பண்ணி, ரசிகர்மன்ற காலத்தில் இருந்தே பிரேமலதா எங்க அப்பாக்கு துணையாக நின்றுள்ளார். நானும் சின்ன வயசுல இருந்து எப்படி எல்லாம் எங்க அப்பா மக்களுக்கு உதவி செஞ்சார். இந்த கட்சிக்காக எப்படி கஷ்டப்பட்டார் என்பதை நானும் பார்த்தேன். என் கனவை கூட நான் ஒதுக்கி வைத்து,  தொண்டர்கள் கூப்பிட்டதற்காக ஓடோடி வந்து,  அவர்களுக்காக துணை நின்று வேலை செய்கின்றேன் என தெரிவித்தார்.