செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு  பிளஸ்சா ? மைனஸ்சா ? என்றால் என்ன ? அவர் கொள்கையை அவர் எடுத்துட்டு போவாரு… என் கொள்கையை நான் எடுத்துட்டு போவேன்.   இப்ப அவர் நினைக்கலாம்…. அண்ணன் ஒரு ஆளா கிடந்து போராடிட்டு இருக்காரு. இப்போ  நான் பேசுறத…

அவர் பேசுவாரு… தமிழர்களுக்கு ஒரு உரிமை… நிலத்திற்கு ஒரு பிரச்சனை…. மக்களுக்கு ஒரு பிரச்சனை…. அப்டிங்கும்போது ஒரு குரல் பத்தல…. இன்னொரு குரல் சேர்ந்து பண்ணலாம்ல…. அதுனால எனக்கு வலிமைதான். எனக்கு ஒன்னும் இழப்பு கிடையாது, மைனஸ் கிடையாது.

ஜெயிலர் படத்துக்கு மட்டும் கடைபிடிக்க படல. நீண்ட காலமா வந்துருச்சி. இந்த கார்பரேட் கூட்டங்கள் சினிமா தயாரிப்புக்குள் வரும் போது… மொத்த திரையரங்கையும் குத்தகைக்கு எடுத்து,  ஒரே வாரம் தான். அதிக பட்சம் ஒரே வாரம். அதிக விலை. போட்டு வசூல் எடுத்துட்டு போய்டணும். முன்னாடிலாம் 100 நாள் ஓட்டுவோம்… 200 நாள் ஓட்டுவோம்… 150 நாள் ஓடும்… அப்படிங்குற முறை ஒழிஞ்சிடுச்சி. 1st செட் வெளியாகும். அப்பறோம் 2nd செட் வெளியாகும்.

அடுத்து சிற்றூர்கள்ள போய் ஓடும்.   அந்த முறையை ஒழிச்சி… உலகெங்கும் ஒரே இது 2000 திரையரங்கு… 1100 ரூபாய் டிக்கெட் பிக்ஸ்…  போட்டு வசூலிச்சுட்டு ஓடிருதது. அது ஜெயிலர்க்கு மட்டும் சொல்லாதீங்க… இது வந்து 15 வருஷமாச்சு.. இந்த முறை வந்து… அதை ஒழிக்கணும்…. அதை மாத்தணும்.. அப்படின்னா…. நீங்க இந்த அமைப்பை மாத்தணும், அரசியலை மாத்தணும். அதுக்கு இந்த ரெண்டு கட்சியும் மாறிமாறி  ஆளுற ஆட்சியை மாத்தணும் என தெரிவித்தார்.