
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் நடன மாஸ்டர் ஆகவும் இருப்பவர் பிரபுதேவா. இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த தி கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா தற்போது எஸ்.ஜே சீனு இயக்கத்தில் பேட்ட ராப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வேதிகா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் நடிகை சன்னி லியோனும் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கும் நிலையில் கடந்த வருடம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பட குழு மற்றொரு பாடலை வெளியிட்டுள்ளது. அதாவது வச்சு செய்யுதே என்ற பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை சன்னி லியோன் அசத்தலாக நடனமாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.