யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023-க்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. UPSC தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வமான இணையதளம் upsc.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பல்வேறு விபரங்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படும்.

கோடிக்கணக்கான மக்களின் கனவான குடிமைப்பணி லட்சியத்தை நிறைவேற்ற, லட்சக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். 2023-ம் வருடத்திற்கான UPSC தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், இதுகுறித்த பல அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு உள்ளது. UPSC CSE PT தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்,.21 கடைசி தேதியாகும். அதோடு தேர்வு தேதிகளையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது.

முதற்கட்ட நுழைவுத் தேர்வு (UPSC CSE Pre Exam 2023) மே 28 அன்று நடைபெறும். UPSC CSE அறிவிப்பு 2023-ல் தகுதி அளவுகோல்கள், UPSC CSE 2023 படிவதேதி, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, தேர்வு முறை மற்றும் பிற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. UPSC ஆனது CSE உடன் இணைந்து இந்திய வனசேவை (IFS) ப்ரிலிமினரி தேர்வு 2023-க்கான அறிவிப்பையும் வெளியிடும். UPSC CSE 2023 அறிவிப்பு அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின், விண்ணப்பதாரர்கள் UPSC CSE பூர்வாங்கத் தேர்வு படிவத்தை நிரப்பலாம்.