டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 1.90 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாக உள்ளது. மேலும் 5,446 பணியிடங்களுக்கான குரூப் 2 பதவிக்கு நடந்த முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.