சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஊடகங்களின் பணி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அவற்றின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதும் அவசியத்திற்குள்ளான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பகூடிய சமூக ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் அடிப்படையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தன் டுவிட்டர் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், நபர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் அவர் உருவாக்கிய வீடியோவை ஓட செய்கிறார். வீடியோ இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் அவர் பேசி கொண்டிருக்கிறார்.

எனினும் அவரது அசைவுகள், செய்கைகள் போன்று வீடியோவின் மற்றொரு பகுதியில் வேறொரு நபர் தோன்றுகிறார். அந்நபர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், ஷாருக் கான் போன்றோரை போன்ற முகஅமைப்புகளை கொண்டு அடுத்தடுத்து மாறி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நபர்களின் முக அமைப்புகளை மார்பிங் செய்து, போலி வீடியோவை தயாரித்து சமூகத்தில் பரவவிட முடியும் என்று எச்சரிக்கை தரும் அடிப்படையில் வீடியோ அமைந்துள்ளது. இவ்வாறு தொழில் நுட்பம் உதவியால் பல துறை பிரபலங்களின் முகஅமைப்புகளை போல் மார்பிங் செய்து, அவர்கள் சொல்வது போன்ற விசயங்களை பரவ செய்யகூடிய ஆபத்து சுட்டி காட்டப்பட்டு உள்ளது.