பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இந்த சம்பவம் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் இந்த மாதம் 14-ம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்று நடக்க இருந்தது.

அதை தற்போது அக்டோபர் மாதத்திற்கு மாற்றி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பலர் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் காக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து புதிய தேதி அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.