தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை நேரத்தின் போது கோடநாடு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் தீர்ப்புக்குள்ளும் அந்த விசாரணைக்குள்ளும் செல்லவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டும் தான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சயான் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த போது அன்று காலை சிறை அதிகாரிகளிடம் அதிமுக ஆட்சிக்காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து 306 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த சம்பவம் நடந்த அன்று உடனடியாக விசாரணை நடத்தி தடையங்களை பத்திரப்படுத்தி வைத்திருந்தால் விசாரணை சீக்கிரம் முடிந்திருக்கும். ஆனால் விசாரணை பல வருடங்கள் ஓடியதால் உண்மை தன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு தாமதம் ஆகிறது. ஜெயலலிதா அம்மையார் தமிழகத்தில் முன்னாள் முதல்வராக இருந்தவர். அவர் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம். எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரையில் உரிய முறையில் விசாரணை நடத்தி விரைவில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்போம் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.