செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  காவேரி பிரசனையில் நடிகர்கள்தான் எல்லாத்தையும் சால்வ் பண்ணனும் கிடையாது. இது அரசு எடுக்க வேண்டிய முடிவு,  மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இன்னைக்கு பாத்தீங்கன்னா ஃபான் இந்தியா பிக்சர்ஸ்,  ஃபான் இந்தியா மூவி எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. வட இந்தியாவில் இருக்கின்றவுங்க இங்க வந்து நடிக்கிறாங்க. அங்க உள்ள நடிகர்கள் இங்க வந்து நடிக்கிறாங்க.

கர்நாடகாதில் உள்ளவுங்க இங்க நடிக்கிறாங்க. மலையாளத்தில் உள்ளவுங்க இங்க நடிக்கிறாங்க. நாம் அங்க போய் நடிக்கின்றோம். இதை நடிகர்கள் செய்யணும்ன்னு நினைக்க கூடாது. அங்க  இங்க இருக்குறவங்க நிர்பந்தத்திற்கு உட்பட்டு  செய்ய வேண்டிய சூழல் வந்துடும். அவரு சும்மா இருக்காரே,  ஒரு அறிக்கையும் கொடுக்கலையே என சொன்னால் ? அவரை திட்ட முடியாது.

அவரு  அவர் வேலையை பார்த்துட்டு இருக்கலாம். அதனால ரொம்ப அழுத்தம் ஒரு கலைஞருக்கு தர வேண்டாம் என நினைப்பவன் நான்.  ஆனால் அதற்கு உரிமை குரல் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி… பெரிய அளவில் பிரச்சனை வந்து மக்களுக்காக போராட வேண்டிய கட்டம் வந்தால் ? மத்திய அரசு சரி பண்ணல… கோர்ட்டும் சரியா முடிவு எடுக்கல… அப்போ ஒரு போராட்டம் வெடிக்கும் போது.. அப்படி ஒன்னு வரக்கூடாதுன்னு நினைக்கின்றவன் நான். வந்தா எல்லாம் ஒன்னு சேர்ந்து நிப்பாங்க என தெரிவித்தார்.