இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை வழங்கியது. அதன் பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது. ஆனால் தற்போது வரை இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உள்ள டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம் work from Home முறையை மார்ச் மாதம் இறுதி வரை மட்டும் நீட்டிப்பு செய்துள்ளது. அதன் பிறகு அலுவலகத்திற்கு வர மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருவதால் ஊழியர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றும்போது தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் என டிசிஎஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.