தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக சொல்லிப்பதாக சமீப காலமாக புகார்கள் இருந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வெளிப்படையாகவே நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த கடையில் அப்படி வாங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கடைகளுக்கும் சென்று நீங்கள் வாங்கியுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான மதுவிலக்கு அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஒரு சில அறிவுரைகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மது கடைகளில் கூடுதலாக மது இருப்பது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கும் பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாதது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் மது கடைகளில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.