இந்தியாவில் கடந்த சில வாரமாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. அதோடு இந்த காய்ச்சல் 5 -7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் இருமல் 3 வாரங்கள் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. அதோடு இன்புளூயன்சா H3N2 வைரஸ் பாதித்தவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் எனவும் வீட்டில் இருந்தபடியே 3 நாட்கள் ஓய்வில் இருப்பது சிறந்தது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.