தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக தற்போதே பலரும் வெளியூர்களுக்கு செல்வதற்கான பயணத்தை திட்டமிடுகிறார்கள். கோடை விடுமுறையை முன்னிட்டு பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்றவற்றில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக தற்போது தெற்கு ரயில்வே கோடை சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 27 மற்றும் மே 4, 11,18,25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லையை சென்றடையும். அதன் பிறகு திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 28 மற்றும் மே 5,12,19,26 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3:20 மணிக்கு எழும்பூரை சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஏப்ரல் 23, 30 மற்றும் மே 7, 14,21,28, ஜூன் 4,11,18,25, ஜூலை 2 ஆகிய நாட்களில் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏப்ரல் 24, மே 1,8,15,22,29, ஜூன்‌ 5,12,19,26, ஜூலை 3 ஆகிய நாட்களில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8:55 மணியளவில் நாகர்கோவிலை சென்றடையும். திருவனந்தபுரத்தில் இருந்து மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7,14,21,28 ஆகிய நாட்களில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில் மறுநாள் காலை 6.45 மணியளவில் திருவனந்தபுரத்தை சென்றடையும். இந்த ரயில் மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 26, மே 3, 10,17,24 ஆகிய நாட்களில் இரவு 10.30 புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

நெல்லையிலிருந்து ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் பிற்பகல் 1:15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 21, 28 மற்றும் மே 5, 12 , 19, 26 ஆகிய நாட்களில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்டர் ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மேலும் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 22, 29 மற்றும் மே 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.