எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இருதரப்பு ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்களுக்கு போஸ்டர், பேனர், கட்டவுட் வைத்து கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இரு படங்களின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் திரையரங்கு உரிமை, ஓடிடி உரிமை மற்றும் சர்வதேச நாடுகளில் வெளியீடு உள்ளிட்டவை மூலம் 194 கோடிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாரிசு திரைப்படத்தின் ஒட்டுமொத்த ரிலீசுக்கு முந்தைய வசூல் 295 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஃப்ரீ ரிலீஸ் வர்த்தகத்தில் 100 கோடி அளவிற்கு வாரிசு முன்னிலையில் இருப்பதாக தெரிகின்றது. இரு வெவ்வேறு கதைகளை கொண்டுள்ள படங்களில் பாக்ஸ் ஆபீஸில் எந்த படம் வெற்றி பெற போவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.