தமிழ் தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பின் சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அண்மையில் ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில் குத்துப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை அணுகினர். அதற்கு ஸ்ரேயா ரூபாய்.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் ஒரு பாடலுக்கு ஆட ரூபாய்.1 கோடியா என படக்குழுவினர் அதிர்ந்து போய் இருக்கின்றனர். தற்போதெல்லாம் எந்த மொழியில் படங்களை எடுத்தாலும் அதை பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட்டு அதிக வருமானம் பார்க்கின்றனர். இதனை மனதில் வைத்தே ஸ்ரேயா ரூபாய்.1 கோடி கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே ஸ்ரேயா கேட்டதை கொடுத்து ஆட வைக்கலாமா (அ) வேறு நடிகையை பார்க்கலாமா என படக்குழுவினர் யோசிக்கின்றனர்.