இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். தமிழகத்தின் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொல்லப் பட்டாலும் அதில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை என்பது தான் சற்று கசப்பான உண்மை. இருப்பினும் ரசிகர்களுக்கு பரிச்சயமான வீரர்களை ஒவ்வொரு ஐபிஎல் நிறுவனமும் தக்கவைத்துக் கொள்வதால் பெரிய அளவில் இது தொடர்பான பிரச்சனைகள் எழுவது கிடையாது.

தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் வெறும் 500 டிக்கெட் மட்டுமே கொடுத்துவிட்டு 2000 டிக்கெட் விற்பனை ஆகிவிட்டதாக கவுண்டரில் இருப்பவர்கள் பொய் சொல்வதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கால் கடுக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி டிக்கெட் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டசபையில் இந்த பிரச்சனை பற்றி பேசாமல், அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஐபிஎல் போட்டியை பார்க்க இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் தற்போது எஸ்.`பி வேலுமணியை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள். எஸ்.பி வேலுமணி சட்டசபை கூட்டத்தின் போது ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு இலவச பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறை 300 இலவச பாஸ்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஒரு பாஸ் கூட வரவில்லை. இது தொடர்பாக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்களுடைய நெருங்கிய நண்பர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவரிடம் பேசி எங்களுக்கும் டிக்கெட் வாங்கி தாருங்கள். நான்கு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாத போது நீங்கள் யாருக்கு டிக்கெட் பெற்று கொடுத்தீர்கள் என கேட்டுக் கலாய்த்தார்.