வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் வருகிற ஐந்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் படத்தின் முன் பதிவுகள் தொடங்கியுள்ளது.

இதனால் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் திரைப்படத்தின் நான்காவது பாடல் ரிலீஸ் ஆனது. மட்ட பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் பிரபல நடிகையான திரிஷா மட்ட பாடலுக்கு நடனம் ஆடி உள்ளாராம். அது மட்டுமில்லாமல் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் கோட் படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடலில் கருப்பு நிற ஆடையில் தோன்றும் ஒருவர் சிவகார்த்திகேயன் தான் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.