துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப் பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிற்கின்றனர்.

இந்த நிலையில் எகிப்து வெளியுறவு மந்திரி சமே ஷோக்ரி நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியாவை தொடர்ந்து அவர் துருக்கிக்கும் செல்ல இருக்கின்றார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் எகிப்து நாட்டின் மந்திரி சிரியாவிற்கு செல்வது இதுவே முதல் முறையாக உள்ளது. இந்த வருகையால் நெருக்கடி காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.