
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார், இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சசிகுமார் மற்றும் சிம்ரன் இணையும் முதல் படம் என்பதால், படம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இயக்குநர் அபிஷான் ஜீவின் தனது முதல் படத்தின் மூலமாக கோலிவுட் -ல் நீங்கா இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.