இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தற்போது 6 சதவீதம் வரை உயர்ந்து 80 டாலரை கடந்துள்ளது.

மேலும் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்மையில் கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.