ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது திருப்பதி கோவிலுக்கு இலவச தரிசன டோக்கன் மற்றும் ஆன்லைன் தரிசன டிக்கெட் போன்றவைகளை வைத்திருப்பவர்கள் மட்டும்தான் வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் பிறகு நேரடி இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சில நாட்களுக்கு கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் திருப்பதி கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4.21 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.