செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டை நல்லா பார்க்கிறேன். மதுரையில் மட்டும் அன்னைக்கு 12 மணிக்கு கடை திறந்தாங்க.. 16 கோடி ரூபாய்க்கு விற்றது. ஒரு மணி நேரத்துல… திண்டுக்கல்ல 16 கோடிக்கு விற்றது. சிவகங்கையில் 12 கோடிக்கு விற்றது.  இதிலே அதிக மகிழ்ச்சி அடைந்தது எங்கள் மதுவிலக்கு ஆய்வுத்துறை அமைச்சர் முத்துசாமி.

எடப்பாடிக்கு  புரட்சித்தமிழன் என்று பெயர் வைத்தது குறித்து,  கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் சொன்னேன்.கல்லிக்கு எதற்கு முள்வேலி ? கழுதைக்கு எதற்கு கடிவாளம் ? உடைந்த சுல்லிக்கு எதுக்கு கோடாலி ? உலர் நிலத்திற்கு எதுக்கு விதைகள் ?  விளக்கமாத்துக்கு எதற்கு பட்டு குஞ்சம் ? வேலத்தின் காட்டில் வேட்டை நாய்க்கு எதற்கு விருந்து ? காட்டிக் கொடுத்த கபோதிக்கு எதற்கு இந்த பட்டம் ?

ஏற்கனவே பெரியாரின் தன்மானக் கொள்கைகளை தாங்கி நின்று, சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவாளன் சத்யராஜுக்கு கொடுத்த அந்த விருதை ஒரு குறுமகா சன்னிதானம் என்று சொல்லி ஒருவர் கொண்டு போய்  கொடுத்திருப்பதன் மூலம்,  தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஒத்திகையை தம்பி விஜய் பார்த்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்  தெரிவித்தார்.