பண வீக்கத்தால் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தினை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன் என பல வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடன் பெற்றவர்கள் சிரமத்தை அனுபவித்தாலும் நிலையான வைப்புத் தொகைகளுக்கு அனைத்து வங்கிகளும் போட்டி போட்டு வட்டியை அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் SBI வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு 7.1% வட்டி தரப்படும் என்று அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி கிடைக்கும்.