தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல் தன்னிகரற்ற ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்தவர். பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், திருமணம் ஆன நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். இந்த விவாகரத்து சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா மறுமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இந்த விவாகரத்து குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ள நாக சைதன்யா, “விவாகரத்து முடிவு எங்கள் இரண்டு பேருக்குமே தனித்தனியாக நல்லது என்றே தோன்றியது. அந்தச் சூழ்நிலையில் அதுதான் சிறந்த முடிவாக இருந்தது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.