நடிகர் விஜயின் லியோ படம் உலக அளவில் 500 வசூலை கடந்ததாக   செவன் ஸ்கிரீன் நிறுவனம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த லியோ திரைப்படமானது கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது வெளியான 12 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்து இருப்பதாக 7 ஸ்கிரீன் நிறுவனமானது அறிவித்திருக்கின்றது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட முதல் நாளில் 144 கோடியும்,  அதே போல 7 நாட்களில் கிட்டத்தட்ட 461 கோடிகளும் வசூல் செய்திருந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது 12 நாட்களில் இந்த திரைப்படம் 540 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டி நிகழ்ச்சியானது நாளை சென்னையில் நடைபெறும். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறக்கூடிய இந்த சூழ்நிலையில் லியோ திரைப்படம் வெற்றி பெற்றதா என்ற ஒரு கேள்வியும் திரை உலக வட்டாரத்திலும் சரி, சினிமா விமர்சகர் இடமும் முன் வைக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாளை  சக்சஸ் மீட்டிங் நிகழ்ச்சியானது நடைபெற இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது இந்த லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூல் அடைந்திருக்கிறது என்று தயாரிப்பு தரப்பானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.