ஒரே நாடு ஒரே ரேஷன் அமலான பின் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இந்த முடிவின் விளைவு தற்போது ரேஷனில் தெரிகிறது என்றே கூறலாம். உண்மையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய கார்டுதாரர்களுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ளது.

இப்போது நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) சாதனங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரேஷன் எடையில் குளறுபடிகளுக்கு வாய்ப்பு இருக்காது என சொல்லப்படுகிறது.