சீன நாட்டில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் ஆலோசகர்களும் கலந்து கொள்வர். மேலும் இதில் அந்நாட்டின் புதிய பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் பலர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதில் புதிய பிரதமராக சீனா அதிபராக ஜின் பிங்கின் நெருங்கிய விசுவாசியான லீ கியாங் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக சீனா தனது ராணுவ பட்ஜெட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு சீனா ராணுவத்திற்கு ரூபாய் 17.57 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இது இந்தியாவில் ராணுவத்திற்காக  ஒதுக்கப்படும் நிதியை விட மூன்று மடங்கு பெரியது ஆகும்.

இந்த நிலையில் 8வது ஆண்டாக சீனா தனது ராணுவ பட்ஜெட்டை உயர்த்தி இருக்கிறது. இதில் ராணுவத்திற்காக 7.2 சதவீதம் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்திற்காக 18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த அண்டை விட 0.1% அதிகமாகும். இந்த சமயத்தில் ராணுவத்திற்காக அதிகமாக செலவிடும் நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.