ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தலைமைக் கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சமக தலைவர் சரத்குமார் அறிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும், யாருக்கும் சமகவின் ஆதரவு கிடையாது என்றும் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பின் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.