பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் இவர் நடித்துள்ளார். அதோடு அரசியல் ரீதியான கருத்துக்களை குறித்தும் பேசியுள்ளார்.

இவர் சில படங்களில் நிர்வாணமாகவும் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதற்காக நடிப்பதை விடுவதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது 2 புதிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த சிஸ்டர் மிட்நைட் எனும் படம் லண்டனில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதிகா ஆப்தே தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.