கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் ராஜேஷ் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் சீமாட்டிகுளத்தில் ராஜேஷ் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குளத்தில் தவறி விழுந்து ராஜேஷ் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.