
நாட்டில் ஏற்கனவே சமீபத்தில் பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கியது. இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப பணிகள் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கியுள்ளது. அதாவது பாஸ்போர்ட் சேவா இணையதள திட்ட சேவை www.passportindia.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இணையதளத்தில் இன்று இரவு 8 மணி முதல் வருகிற 23ஆம் தேதி காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த குறிப்பிட்ட நாட்களில் இணையதளம் இயங்காது. இந்த காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எந்த ஒரு சேவையும் கிடைக்காது. மேலும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த பிறகு விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.