நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது. எனினும் நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு, மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில் கட்டண சலுகையை திரும்ப வழங்காதது ஏமாற்றம் தருகிறது என்றார்.