ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்து இருக்கிறது. இதுவரையிலும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் வேலையை முடித்திடவேண்டும். இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும். மற்றொருபுறம் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மே 2017-ல் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பான்-ஆதார் இணைப்பதிலிருந்து குறிப்பிட்ட பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

# அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய மக்கள்.

# வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் வராதவர்கள்.

# கடந்த வருடம் வரை 80 வயது நிறைவடைந்த (அ) அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்.

# இந்திய குடிமகனாக இல்லாதவர்கள் உள்ளிடோர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை.