தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தகுதியுயள்ள பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு  வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் OTP என்றால் என்னவென்று எனக்கே தெரியாது என முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். OTP என்றால் என்னவென்று நானே என் மகனிடம்தான் கேட்க வேண்டும். இந்த நிலையில் திமுக அரசு OTP முறையில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்போகிறதா? என கடிந்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது.