சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்தது வருகின்றது. இந்த திரைப்படத்தில் மாடல் அழகி ஒருவரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி நடந்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி சன்னா சுரி. சென்ற வருடம் ஜூலை மாதம் பியூஸ் ஜெயின் என்பவர் இன்ஸ்டா மூலம் தன்னை தொடர்பு கொண்டதாகவும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்பட்டதாகவும் அதில் பெண் போலீஸ் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் தன்னிடம் தெரிவித்தார். மேலும் அவரின் தாயார் வன்னிதாவிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

இதன் மூலம் நம்பிக்கை ஏற்பட்டதால் போலீஸ் உடையில் நடித்த வீடியோவை அனுப்பி வைத்தேன். அடுத்த சில நாட்களிலேயே என்னை தொடர்பு கொண்ட பியூஸ் ஜெயின் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க நீங்கள் தேர்வாகி விட்டதாக கூறினர். மேலும் சன்னாசுரி ரஜினிகாந்த் உடன் இருப்பது போன்ற ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டரையும் வனிதாவுக்கு அனுப்பி வைத்தார். இதனால் மகிழ்ச்சியான மாடல் அழகி அந்த போஸ்டரை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார்.

இதன் பின் மாடல் அழகியிடம், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் பங்கேற்க விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறி 8 லட்சத்தை 48 ஆயிரத்தை கறந்தார்கள். இந்த நிலையில் சென்ற நவம்பர் மாதம் ஜெயிலர் திரைப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர், மாடல் அழகியின் பதிவை பார்த்து அவரின் தாயிடம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அது போலி போஸ்டர் எனவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாடல் அழகிக்கும் அவரது தாயாருக்கும் மோசடி குறித்து தெரிய வந்தது. பின் தாங்கள் ஏமாற்றப்பட்டது உணர்த்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார்  மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்கள்.