பாலிவுட் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி வரும் ராக்கி சாவந்த் சமீபத்தில் அழுது கொண்டே மிகவும் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய தாயார் ப்ரெயின் ட்யூமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதோடு, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னுடைய தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் தன்னுடைய காதலர் கான் துரானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மருத்துவமனையில் தாயார் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராக்கி சாவந்த் ரகசியமாக காதலரை திருமணம் செய்திருப்பது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராக்கி சாவந்த் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.