தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதில் உள்ள சாதக பாதகங்களை தெரிந்து கொள்வதற்காகவே அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.

அதன் பிறகு பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு 1600 கோடி நிதி கொடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு சலுகைகளும் நிறுத்தப்படாது. தற்போது சென்னையில் ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் போலியானது. போக்குவரத்து துறையை தனியார் வசம் ஒப்படைத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மேலும் இன்று மாலை அண்ணா தொழிற்சங்கம் நடத்த உள்ள போராட்டத்தையும் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.