செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1967இல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான தலைவர்களை சிறிய வட்டத்துக்குள் அடைத்து… ஜாதி முத்திரையை குத்திருக்காங்க. இன்னைக்கும் தென் தமிழகத்தில் குருபூஜை விழாவிற்கு போனீங்கனா..?  10,000 போலீஸ்காரங்க இருப்பாங்க….  மினிமம் 10,000 போலீஸ்காரங்க ஒரு பூஜைக்கு இருக்காங்க. காரணம் எல்லாத்தையும் ஜாதியாக மாற்றி….. ஜாதி கலவரம் வரும் அளவுக்கு….. குருபூஜையை திமுக அரசு இத்தனை ஆண்டு காலமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள்.

அதனால் தான் ஒரு ஒரு குருபூஜை விழாவுக்கும் போறது போர் பகுதிக்கு போவது மாதிரி இருக்கு. நான் மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில்… குறிப்பாக தென் தமிழகத்தில் நிறைய குருபூஜை விழாவிற்கு செல்கின்றேன்.ஒரு ஒரு குரு பூஜை விழாவிற்கு செல்லும்போது கிட்டத்தட்ட 20, 25 அடுக்கு காவல்துறை செக்யூரிட்டியை மதுரை ஏர்போர்ட்டில்  இருந்து ஆரம்பித்து….  அந்த குருபூஜை விழா செல்லும் வரை… அந்த செக்யூரிட்டி எல்லாம் தாண்டி….  மக்கள் யாரும் வரக்கூடாது  என்று 144 CRPC 4 நாட்களுக்குப் போட்டு…

பக்கத்து மாவட்டத்திலிருந்து… பத்து மாவட்டத்தில் இருந்து SP காவல்துறை அதிகாரிகள்,  கலெக்டர்கள் எல்லாம் கொண்டு வந்து குவித்து, தலைவர்களுக்கு குருபூஜை விழா எடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் தலைவர்களை ஜாதிக்குள்ள அடைத்து வைத்து,  அதன் மூலமாக ஜாதி கலவரங்களை உருவாக்கியதற்கு முக்கிய காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு இருக்கிறது. இதை கவர்னர்  சொன்னது என்ன தப்பு ? அப்படி இல்லையென்றால் திமுக உடைய அரசோ,  முதன்மை செயலாளரோ சொல்லட்டும் அது போன்று  தலைவர்களை நாங்கள் ஜாதி முத்திரைக்குள் அடைத்து வைக்கல என சொல்லட்டும் என தெரிவித்தார்.