தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – அதிமுக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்  அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசி இருந்தனர்.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. செப்டம்பர் 18ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என பேட்டி அளித்துள்ளார்.