சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. NCERT பாட புத்தகங்களில் இருந்து மேலும் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து ஜனநாயக சவால்கள், பொதுப் போராட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய பாடங்கள் நீக்கியது. இதனுடன் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து வேதி தனிமங்களின் அட்டவணை என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் போது சுமை அதிகரித்ததால் நீக்கம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது. NCERT ஏற்கனவே பல பாடங்களை நீக்கியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல பாடங்களும் நீக்கப்பட்டுள்ளது.