சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே நாளில் அறிவியலை பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஒளி புகும் ஊடகத்தின் வழியே ஒளி பயணிக்கும் போது அது சிதறடிக்கப்பட்டு அதன் அலை நீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது என்பது ராமன் விளைவு. சர் சி வி ராமனின் பங்களிப்பை உலகம் முழுவதும் இருப்பவர்கள் அறிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாணவர்களுக்கு ஏராளமான போட்டிகள் நடைபெறும்.

அந்த தினத்தில் மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை சமர்ப்பார்கள். சர் சி வி ராமனின் ராமன் விளைவு இந்தியாவிற்கு உலக அளவில் பெருமையை தேடி தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசு சி.வி. ராமனுக்கு கிடைத்தது. அதன் விளைவாக அறிவியல் என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அந்த நாளை அரசு தேசிய அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறது.