ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் லயோலா கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்ற கேள்விக்கு EPS-க்கு 53 சதவீதம் பேரும், முதல்வர் ஸ்டாலினுக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று போதைப்பொருளை தமிழக அரசு கட்டுப்படுத்தும் விதம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நன்று- 11%, அதிருப்தி -80%, கருத்தில்லை-9 % பேர் கூறியுள்ளனர்.