ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள எம்.எஸ் தோனி கடைசி வீரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவும் நிலையில், அவர் குறைந்தபட்சம் 10 பந்துகளை சந்திக்கும் நிலையில் தான் களமிறங்குகிறார். இந்நிலையில் நேற்று லக்னோ மற்றும் சென்னை அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தோனி கடைசியாக களமிறங்கி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்ட்ரிகள் விளாசி மொத்தமாக 9 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 28 ரன்களை குவித்தார்.

நேற்று நடைபெற்ற போட்டியின் போது சிஎஸ்கே அணி 90 ரன்கள் எடுப்பதற்கு முன்பாகவே 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது தோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் மற்றொரு வீரர் களமிறங்கினார். இதை சுட்டிக்காட்டி சிஎஸ்கே அணியை ஜஸ்லாந்து கிரிக்கெட் போர்டு விமர்சித்துள்ளது. அதாவது தோனியை முன்வரிசையில் இறக்குவதில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜஸ்லாந்து கிரிக்கெட் போர்டு தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் எம்.எஸ் தோனி போன்ற ஒரு வீரர் எங்கள் அணிக்காக விளையாடினால் அவரை நாங்கள் 8-வது இடத்திற்கு முன்பாக களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று தோன்றும் அவருக்கு சிஎஸ்கே அணியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெறவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.