தூக்கி எரியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகை விலைமதிப்பற்ற உலோகங்களை பிரித்து எடுக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் இன்றைய வானொலி வழியிலான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மக்களுடன் உரையாடுவது அதிக மகிழ்ச்சி தருகின்றது எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார். அப்போது ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் இ-கழிவுகள் தூக்கி எறியப்படுவதாக ஐநா அறிக்கை தெரிவித்ததை குறிப்பிட்ட அவர் இந்த தூக்கி எறியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்களை வெவ்வேறு நடைமுறைகளின் வழியே நாம் பிரித்து எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.