சினிமாக்களை பார்த்துதான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் கொண்டாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. எனினும் சினிமாக்களில் புகைப்பிடித்தல் மற்றும் மது குடிப்பது போன்று காட்சி வந்தால் அதுகுறித்த வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது. தற்போது பிரபல முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் தன் சோஷியல் மீடியாவில் மதுக் குடித்தல், புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை கைவிடுவது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது “மது மற்றும் புகைப்பிடிப்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம். எனினும் அதை விட்டுவிட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன். அது எளிதான விஷயமாகும். மது அருந்தி கொண்டிருக்கும்போதே கிளாசை தூக்கி எறியுங்கள். அதே நேரம் சிகரெட்டை உதட்டிலிருந்து துப்பி அதற்கு விடைகொடுங்கள். இதுதான் இரண்டு பழக்கங்களையும் கைவிடுவதற்கு சிறந்த வழி ஆகும். கொஞ்ச கொஞ்சமாக நிறுத்துவது முடியாத ஒன்றுதான். புற்று நோயை அகற்றுவது போன்று இது செயல்படும் என குறிப்பிட்டு உள்ளார்.