ஹோலி பண்டிகைக்கு பின் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி(DA) நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நிலுவையிலுள்ள அகவிலைப்படி கிடைக்க போவது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணி அதிகரிப்பு உள்ளிட்ட பல நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது. அடுத்த மாதத்தில் ஊழியர் சங்கத்தின் 3 அழுத்தமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நீண்டகாலமாக ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது குறித்த பிரச்சினை இருந்து வருகிறது. இப்போது வெளியாகியுள்ள செய்திகளின் படி லெவல்-3 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத்தொகை ரூ.11,880 -ரூ.37,554 வரை இருக்கிறது. லெவல்-13 (அ) லெவல்-14 ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை ரூ.1,44,200 -ரூ.2,15,900 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது அடுத்த மாதம் பிட்மென்ட் காரணியை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கும் என சொல்லப்படுகிறது.