சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அருகில் உள்ள பேருந்து நிலையங்களுடன் இணைக்க CUMTA திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு அருகே ஜிஎன்டி சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது.

இங்கு மல்டி மாடல் போக்குவரத்து வசதிகளை பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊதா வழிதடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மெட்ரோ ரயில் திட்டம் அமைகிறது. இதில் மாதவரம் பேருந்து நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 50 மீட்டர் பாலம் கட்டப்பட இருக்கிறது. மேலும் இது பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று.