தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் கடைசியாக தேவாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஜான்வி கபூர் அவருக்கு கதாநாயகியாக நடத்திருந்தார். இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘என்டிஆர்31’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் ‘மேட் இன் இந்தியா’ வெப் தொடர் உருவாக உள்ளது. இது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே தொடராக வெளிவர உள்ளது. இதில் தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தொடரின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.